விருதுநகர் மாவட்ட புதிய SP மனோகர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

விருதுநகர் மாவட்ட புதிய SP மனோகர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
X
விருதுநகர் மாவட்டத்தின் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மனோகர் பொறுப்பேற்றுக் கொண்டார்

விருதுநகர்மாவட்ட புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பெருமாள் பதவி வகித்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் 21 மாவட்ட கண்காணிப்பாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அதில் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் மற்றப்பட்டு புதிய மாவட்ட கண்காணிப்பாளராக மனோகர் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் விருதுநகர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக மனோகர் இன்று மாவட்ட காவல் அலுவலகம் வந்து பதிவி ஏற்றார் இதுகுறித்து அவர் கூறுகையில் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இன்று முதல் பணி ஏற்கிறேன். மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை சீரிய முறையில் செயல்படுத்தப்படும் என்றும் சட்டத்தை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்படும் என்றும் மணல் உள்ளிட்ட கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்...

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!