மரக்கன்றுகள் நட்டு நடிகர் விவேக்கிற்கு மௌன அஞ்சலி

மரக்கன்றுகள் நட்டு நடிகர் விவேக்கிற்கு மௌன அஞ்சலி
X

விருதுநகரில் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் மறைவுக்கு ஆலமரம் நண்பர்கள் சார்பாக மலர் தூவி மெழுகுவர்த்தி ஏற்றி மரக்கன்றுகள் நட்டு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

விருதுநகர் ரோசல்பட்டி ஊராட்சியை சேர்ந்த ஆலமர நண்பர்கள் சார்பாக உயிரிழந்த நகைச்சுவை நடிகர் விவேக்கிற்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில் பாண்டியன் நகர் பகுதியில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மெழுகுவர்த்தி ஏற்றியும் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து முத்தால் நகர், விவேகானந்தர் தெரு, காந்தி நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் ஆக்சிஜன் தரக்கூடிய ஆலமரம் கொன்றை, வேங்கை, புங்கை, வேம்பு உள்ளிட்ட 10 மரக்கன்றுகளை நட்டு ஆலமர நண்பர்கள் சார்பில் மரக்கன்றுகள் நட்டு மறைந்த நடிகர் விவேக் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!