/* */

மழை ரெட் அலர்ட்டாக வந்தாலும் சரி அதை தாண்டி வந்தாலும் அரசு சந்திக்கும்: அமைச்சர்

மழை ரெட் அலர்ட்டாக வந்தாலும் சரி அதை தாண்டி வந்தாலும் தமிழக அரசு சந்திக்கும். விருதுநகரில் வருவாய்துறை அமைச்சர் பேட்டி

HIGHLIGHTS

மழை ரெட் அலர்ட்டாக வந்தாலும் சரி அதை தாண்டி வந்தாலும் அரசு சந்திக்கும்: அமைச்சர்
X

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன்.

விருதுநகர் பள்ளியில் வருவாய் துறை அமைச்சர் ஆய்வு செய்தார். விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் உள்ள ஆஷா, பாஷா உயர்நிலை பள்ளியில் பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன் ஆய்வு நடத்தினார்.

ஆய்வின்போது மாணவர்கள் பள்ளிக்கு வருவதில் சிரமம் ஏதும் உள்ளதா? பள்ளியில் பாதுகாப்பான சூழல் உள்ளதா என மாணவர்களிடம் கேட்டறிந்தார். மேலும் பள்ளிக்கு வருவது பிடித்துள்ளதா? என கேட்டதற்கு மிகவும் பிடித்திருப்பதாக தெரிவித்தனர். அப்போது மாணவி ஒருவர் பூ கொடுத்து அமைச்சரை வரவேற்றார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், ரெட் அலர்ட் உள்ள பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் உயிரிழப்பு ஏற்படாதவாறு பார்த்து கொள்ள வேண்டும். மழை ரெட் அலர்ட்டாக வந்தாலும் சரி அதை தாண்டி வந்தாலும் தமிழக அரசு சந்திக்கும். கடந்த கால வரலாற்றில் இனத்தில், சமுதாயத்தில், மொழியில் மறைத்ததை மாற்றப்பட்டதை மாற்றி அமைத்து வருகிறார் தமிழக முதல்வர்.

அதிமுக திமுகவை பாராட்டாது அப்புறம் அவர்களுக்கு வேலை இல்லாமல் போய்விடும். என பேட்டியளித்தார். ஆய்வின்போது அமைச்சருடன் மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாதரெட்டி உடனிருந்தார்.

Updated On: 5 Nov 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.