பட்டாசு உயிரிழப்பிற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு: மாதர் சங்க மாநில செயலாளர் பேட்டி
விருதுநகரில் இந்திய மாதர் தேசிய சம்மேளன சங்க மாநில செயலாளர் மஞ்சுளா பேட்டி
பட்டாசு விபத்தில் உயிரிழக்கும் குடும்பங்களுக்கு 5 லட்சம் இழப்பீடு தமிழக அரசு தர வேண்டும் விருதுநகரில் இந்திய மாதர் தேசிய சம்மேளன சங்க மாநில செயலாளர் மஞ்சுளா பேட்டி
உள்ளூர் பொருட்கள் வாங்கி ஊக்குவிக்க பிரதமர் மோடி தெரிவித்துள்ளார், ஆனால் பட்டாசு தொழிலை அழிக்கும் விதமாக உச்சநீதீமன்றம் ஆணை உள்ளது. உச்ச நீதீமன்றம் ஆணை திரும்ப பெறனும், பட்டாசு விபத்தில் உயிரிழக்கும் குடும்பங்களுக்கு 5 லட்சம் இழப்பீடு தர வேண்டும், பெண் சிசு கொலை தமிழக முன்னெடுக்க வேண்டும், உள்ளூர் புகார்கள் கமிட்டிகள் அமைக்க வேண்டும்.
பாராளுமன்ற சட்டமன்றங்கள் உட்பட அனைத்து துறைகளிலும் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் பாலியல் குற்றங்களை தடுத்து நிறுத்த தனி சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் போக்சோ பாலியல் குற்றவாளிகள் மீது விரைவில் விசாரணை செய்த குற்றவாளிகளுக்கு தண்டனையை உறுதி செய்ய வேண்டும்.
ஜாதி ஆணவ படுகொலை எதிராக சிறப்பு தனி சட்டம் வேண்டும், உள்ளாட்சி தேர்தலில் பதவி ஏற்பவர்கள் இடைஞ்சல் அளிக்காமல் ஒத்துழைக்க வேண்டும், மத்திய அரசு பெண்களுக்கான திருமண வயதை 18 வயதிலிருந்து 21 வயதாக உயர்த்தியிருப்பது கண்டனத்திற்கு உரியது எனவும் பெண்கள் விசயங்களை மத்திய அரசு ஜாதி ரீதியாக, மத ரீதியாக மாற்றுவது கண்டிக்கத்தக்கது.
மேலும் தேசிய ஊரக வேலை திட்டத்தில் 100 நாட்கள் வேலையை 200 நாட்கள் மாற்ற வேண்டும், அதில் உள்ள சம்பள பாக்கியை உடனடியாக அவரவர்கள் வங்கி கணக்கில் ஏற்றிட வேண்டும், பள்ளி சிறுமிகள் மீதான பாலியியல் வன்முறைகள் தடுக்க பள்ளிகளில் புகார் பெட்டி அமைக்க வேண்டும் என பேட்டியின் போது தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu