தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருக்காது.

தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருக்காது.
X
ஆக்சிஜன் தயாரித்த தொழிற்சாலைகளை சீரமைத்து ஆக்சிஜன் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டமன்ற அரங்கில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது

இதில் கொரனோ நிவாரண நிதியாக ரூபாய் 2ஆயிரம் வழங்கப்படும் திட்டத்தை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ். எஸ். ஆர் இராமச்சந்திரன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்

பின்னர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவ அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள், கொரோனா விழிப்புணர்வு, தடுப்பு நடவடிக்கைகள், நிவாரணப்பணி போன்றவற்றில் கவனம் செலுத்த அறிவுறுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.கே எஸ் எஸ் ஆர் ராமசந்திரன்,

1. கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வரும் நபர்களுக்கு உயிர் காக்க சிகிக்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா பரவுதலை தடுக்க உள்ளாட்சி துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும், அரசு மருத்துவமனக்கு நிகராக தனியார் மருத்துவமனைக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கை உபகரணங்கள் வழக்கபட்டு கண்காணிக்கப்படும் என தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டத்தில் தற்போது பயன்பாட்டியில் 62ஆக்சிஜன் சிலிண்டர்கள் கையிருப்பில் 90 சிலிண்டர்கள் இருப்பதாகவும் இவற்றை 200 சிலிண்டர்களாக உயர்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

அதை தொடர்ந்து பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா இறப்பு விகிதத்தை குறைக்க அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இன்று முதல் தூத்துக்குடி ஸ்டெர்லைட்டில் தயாரிக்கப்படும் ஆக்சிசன் முதல்கட்டமாக அருகில் உள்ள மாவட்டங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். நேற்று சிங்கப்பூரிலிருந்து 248 காலி சிலிண்டர்கள் இந்திய விமானப்படை மூலம் கொண்டு வந்துள்ளது, கேரளாவிலிருந்து நிறுத்தப்பட்ட 40 மெட்ரிக் டன் ஆக்சிசன் சேவை சரி செய்யப்பட்டு விடும் என்று கூறினார்.

தென்மாவட்டங்களில் சிலிண்டர் பற்றாக்குறை இல்லாமல் இருப்பதற்காக தனியார் தொழில் நிறுவனங்கள் தாமாக முன்வந்து ஆக்சிசன் தயாரிப்பை தொடங்கி உள்ளன. தமிழகத்தில் எந்த இடத்திலும் ஆக்சிசன் பற்றாக்குறை இல்லாத அளவிற்கு ஏற்கனவே ஆக்சிசன் தயாரித்த தொழிற்சாலைகள் ஆய்வு செய்யப்பட்டு சீரமைத்து ஆக்சிஜன் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தற்போது மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு தேவையான ஆக்சிசன் வந்துகொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

Next Story