பொது முடக்கத்தால் உளுத்தம்பருப்பு விலை உயர்வு
வெளி மாநிலங்களில் பொதுமுடக்கம் அமலில் உள்ளதால் விருதுநகர் சந்தையில் உளுத்தம்பருப்பு விலை உயர்ந்துள்ளது.
மும்பை, பஞ்சாப், உத்தரபிரதேசம் ஆகிய பல்வேறு வெளி மாநிலங்களிலிருந்து விருதுநகர் பருப்பு ஆலைகளுக்கு உளுந்து, பாசிப்பருப்பு, மசூர் பருப்பு உள்ளிட்ட அனைத்து வகையான பருப்புகளும் கொண்டுவரப்பட்டு பின்னர் இங்குள்ள பருப்பு ஆலைகளில் அரவை செய்து சமையலுக்கு பயன்படுத்தும் வகையில் பக்குவப்படுத்தப்பட்டு தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு வெளி மாநிலங்களுக்கு விலை நிர்ணயம் செய்து விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மும்பை உள்ளிட்ட வெளிமாநிலங்களில் கொரோனோ வைரஸ் பாதிப்பு காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் விருதுநகர் மார்க்கெட்டில் பருப்பு, உளுந்து வகைகள் விலை உயர்ந்து காணப்படுகிறது. விருதுநகர் சந்தையில் கடலை எண்ணெய்(15 கிலோ டின்) ரூ.50 அதிகரித்து.2750 ரூபாய்க்கும், நல்லெண்ணெய் ரூ.3700 ரூபாய்க்கும் சன்பிளவர் எண்ணெய் ரூ.2800, பாமாயில் ரூ.50 அதிகரித்து ரூ.2100 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
மசூர் பருப்பு பருவட்டு ரூ.7800 ரூபாய்க்கும், உருட்டு உளுந்து நாடு வகை ரூ.300 அதிகரித்து ரூ.10,500ரூபாய்க்கும், பர்மா வகை ரூ.300 அதிகரித்து ரூ.9500 ரூபாய்க்கும், 100 கிலோ தொழி உளுந்தம்பருப்பு நாடு வகை ரூ.200 அதிகரித்து ரூ.9000 ரூபாய்க்கும், 100 கிலோ பாசிப்பருப்பு ரூ.200 அதிகரித்து ரூ.9600 ரூபாய்க்கும், பட்டாணி பருப்பு ரூ.150 அதிகரித்து ரூ.6500 ரூபாய்க்கும், வெள்ளை பட்டாணி 100 கிலோ ரூ.150 அதிகரித்து ரூ.6600 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
ஒரு குவிண்டால் நாட்டு வத்தல் ரூ.1000 குறைந்து ரூ.9000 ரூபாய்க்கும், ஆந்திரா ஏ.சி.வத்தல் 1000 ரூபாய் விலை குறைந்து ரூ.9000 ரூபாய்க்கும், முண்டு வத்தல் ரூ.20,000 -ரூ.25,000 ரூபாய்க்கும், மல்லி நாடு 40 கிலோ ரூ.4000- 4200க்கு விற்பனையாகிறது. மகாராஷ்டிராவில் கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் பகலில் மட்டுமே மில்களில் பருப்பு உளுந்து பணிகள் நடப்பதால் அதன் வரத்து குறைவாலும் இவற்றின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu