விருதுநகரில் காவல்துறையினர் மதுவிலக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்

விருதுநகரில் காவல்துறையினர் மதுவிலக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்
X

விருதுநகரில் காவல்துறையினர் மதுவிலக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தினர்.

விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மதுவிலக்கு காவல்துறை சார்பில் மதுவிலக்கு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்.

விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மதுவிலக்கு காவல்துறை சார்பில் மதுவிலக்கு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

மதுரை மண்டல காவல்துறை கண்காணிப்பாளர் மகேஸ்வரன் உத்தரவின் பேரில் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் தலைமையில் சாத்தூர் நகர மதுவிலக்கு காவல் ஆய்வாளர் கிரேஸ் சோபியா பாய் முன்னிலையில் காவல்துறையினர் கலந்துகொண்ட இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மதுவினால் ஏற்படும் தீமைகள் மற்றும் அதனால் குடும்பங்கள் அடையும் துன்பங்கள் பல இழப்பு மற்றும் உடல்நலக்குறைவு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை விளக்கிக் எடுத்துக்கூறி பொதுமக்களுக்கு காவல்துறையினர் துண்டு பிரசுரங்கள் விநியோகித்தனர்.

மது அருந்தக்கூடாது குடும்பத்தை பாதுகாப்பாக என்பது போன்ற உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது பெரும் உயிரிழப்பை ஏற்படுத்துவதோடு குடும்பத்திற்கு பேரிழப்பாக அமையும் என்பதையும் விளக்கி எடுத்துரைத்தனர்.

Tags

Next Story
ai solutions for small business