ஜாதி சான்றிதழ் வழங்காததைக் கண்டித்து நூதன முறையில் மனு அளித்த பெற்றோர்

ஜாதி சான்றிதழ் வழங்காததைக் கண்டித்து நூதன முறையில் மனு அளித்த பெற்றோர்
X

ஜாதி சான்றிதழ் வழங்காததைக் கண்டித்து கண்ணில் கருப்பு துணி கட்டி வந்த விவசாயி

நான்கு வருடங்களாக ஜாதி சான்றிதழ் வழங்காததைக் கண்டித்து குழந்தைகளுடன் நூதன முறையில் பெற்றோர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் மணிமாறன். இவர் தினக்கூலி வேலை செய்து வருகிறார். இவர் காட்டு நாயக்கர் சமுகத்தை சேர்ந்தவர். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் ஒரு மகன் கல்லூரி முதல் ஆண்டும் மற்றொரு மகன் பள்ளி இறுதி ஆண்டும் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தனக்கு காட்டுநாயக்கர் சமுகம் என்று சாதி சான்றிதழ் வழங்கியது போல் தன்னுடைய மகன்களுக்கும் வழங்க வேண்டும் என அருப்புக்கோட்டை தாசில் தாரிடம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணப்பித்து இருந்தார்.

ஆனால் தற்போது வரை அருப்புக்கோட்டை தாசில்தார் சாதி சான்றிதழ் வழங்க மறுப்பதாக கூறி இன்று தன்னுடைய இரண்டு மகன்களுடன் கண்ணில் கருப்பு துணி கட்டி நூதன முறையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தார்.

இந்த நிலையில் ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தியதால் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக தன்னுடைய மகன்களுக்கு சாதி சான்றிதழ் கேட்டு பல முறை மனு கொடுத்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால் தன்னுடைய மகன்களின் படிப்பு பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் அதே நேரம் அரசின் சலுகைகளை பெற முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

எனவே தன்னுடைய இரண்டு மகன்களுக்கும் தனக்கு கொடுத்தது போலவே சாதி சான்றிதழ் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!