சிவகாசி பகுதியில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள்: கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

சிவகாசி பகுதியில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள்: கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
X

ஆனைக்குட்டம் அணைக்கட்டுப் பகுதியில் ஆட்சியர் மேகநாதரெட்டி முன்னிலையில் வடகிழக்கு பருவமழை மற்றும் கண்காணிப்பு அலுவலர் காமராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சிவகாசி ஆனைக்குட்டம் அணைக்கட்டு பகுதியில் வடகிழக்கு பருவமழை மற்றும் கண்காணிப்பு அலுவலர் காமராஜ் பார்வையிட்டு ஆய்வு.

சிவகாசி வட்டம் ஆனைக்குட்டம் அணைக்கட்டுப் பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாதரெட்டி முன்னிலையில் வடகிழக்கு பருவமழை மற்றும் கண்காணிப்பு அலுவலர் காமராஜ்பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம் ஆனைக்குட்டம் அணைக்கட்டு பகுதியில் வடகிழக்கு பருவ மழையையொட்டி மழை பெய்து வருவதால் நீர்வள ஆதாரத்துறையின் மூலம், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணைக்கட்டின் சுற்றுப்புறப்பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர் மாவட்ட வடகிழக்கு பருவமழை ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலர் காமராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில் அணைகளின் நீர் இருப்பு, நீர்; வரத்து, மதகுகளின் உறுதி தன்மை, வரத்து கால்வாய்கள் உள்ளிட்டவை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் வடகிழக்கு பருவமழை ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இவ்வாய்வின் போது பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர் மாவட்ட வடகிழக்கு பருவமழை ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலர் தெரிவித்ததாவது:- முதலைமைச்சர் வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாத வண்ணம் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்

அதன்படி இன்று ஆனைக்குட்டம் அணை ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகள், ஏரிகள், கண்மாய்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, அணைகள் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டு, நீர் வரத்து அதிகமாக இருந்தால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாத வண்ணம் கவனமான முறையில் உபரிநீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனைக்குட்டம் அணைப்பகுதியில் மணல் மூட்டைகளை கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் செய்யப்பட்டுள்ளது என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர் மாவட்ட வடகிழக்கு பருவமழை ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலர் காமராஜ் தெரிவித்தார். இவ்வாய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் மங்கள ராமசுப்பிரமணியன், செயற்பொறியாளர் ராஜா மற்றும் சிவகாசி வட்டாட்சியர் ராஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story