விருதுநகர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விருதுநகர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

விருதுநகரில் கூட்டுறவு துணை பதிவாளர் அலுவலகம் முன்பு பால் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகரில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டுறவு துணை பதிவாளர் அலுவலகம் முன்பு கூட்டுறவு சங்கங்களில் மூலம் கொள்முதல் செய்யும் பாலுக்கு ஆன்லைன் மூலம் பால் பணம் பட்டுவாடா செய்ய வலுயுறுத்துவதை கண்டித்து பால் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்பாட்டத்தில் மாவட்டத்தில் இருந்து 100க்கு மேற்பட்ட கிராமப்புற பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்த ஆர்பாட்டத்தின் போது கிராம புற பால் உற்பத்தியாளர்களுக்கு ஆன்லைன் மூலம் பால் பணம் பட்டுவாடா என்ற பெயரில் உற்பத்தியாளர்கள் வாழ்வாதாரத்தை சீரழிக்காதீர் மற்றும் பால் உற்பத்தியாளர்களின் அன்றாட தேவைகளான மாட்டுத் தீவனம் மருத்துவ செலவிற்காக சங்கங்களின் மூலம் முன் பணம் பெறும் நிலையை மாற்ற முயற்சிக்காதே உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து ஆவின் நிர்வாகத்திற்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பி பால் உற்பத்தியாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 640 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு