சுதந்திர தினத்தன்று கிராம சபைக்கூட்டம் நடத்த மக்கள் நீதி மய்யம் மனு

சுதந்திர தினத்தன்று கிராம சபைக்கூட்டம் நடத்த மக்கள் நீதி மய்யம் மனு
X
சுதந்திர தினத்தன்று கிராம சபைக்கூட்டம் நடத்த மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கலெக்டரிடம் மனு

சுதந்திர தினத்தன்று கிராம சபைக்கூட்டம் நடத்த மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது

விருதுநகர் மாவட்ட மக்கள் நீதி மய்யம் சார்பில் விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாதரெட்டியிடம் மனு அளித்தனர். இந்த மனுவில்,சுதந்திர தினத்தன்று மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டங்கள் நடத்த வேண்டும். கிராம சபைக்கூட்டத்திற்கு 7 நாட்களுக்கு முன்பு அழைப்பு விடுக்க வேண்டும், கிராம சபைக்கூட்டத்தில் முன் வைக்கப்பட வேண்டிய முக்கிய ஆவணங்கள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும். கோரிக்கைகள் முறையாக தீர்மானங்களாக பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட 7 கோரிக்கைகள் மனுவில் விடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் நீதீ மய்யம் கட்சியினர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தனர்.

Tags

Next Story
ai automation in agriculture