சுவாமி விவேகானந்தர் சேவாலயம் 300 மரக்கன்றுகள் நடவு

திருச்சுழி அருகே உடையனாம் பட்டி பகுதியில், சுவாமி விவேகானந்தர் சேவாலயம் சார்பில் 300 மரக்கன்றுகள் நடப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி யைச் சேர்ந்த சுவாமி விவேகானந்தர் சேவாலயம் சார்பில் விவேகானந்தர் வனம் திட்டத்தின் கீழ் இன்று திருச்சுழி ஒன்றியம், உடையனாம்பட்டி கிராமத்தில் தாமரைக்குளம் சாலையில் கிராம பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து 300க்கும் மேற்பட்ட நிழல் தரும் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் உடையனாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் முருகன், காரியாபட்டி பசித்தவர்க்கு உணவளிக்கும் இன்பம் பவுண்டேஷன் நிறுவனர் விஜயகுமார், பசுமை பாரதம் அறக்கட்டளை நிறுவனர் ஆசிரியர் பொன்ராம், காரியாபட்டி சுவாமி விவேகானந்தர் சேவாலயத்தின் செயலாளர் ஞானசுந்தரம், தகவல் தொழில்நுட்ப குழு தலைவர் மாரிச்சாமி, தகவல் தொழில்நுட்ப குழு துணை தலைவர் P.பெருமாள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!