விருதுநகரில் காமராசரின் பிறந்தநாள் விழா; கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை

விருதுநகரில் காமராசரின்  பிறந்தநாள் விழா;  கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை
X

விருதுநகரில் உள்ள காமராஜரின் இல்லம் பைல் படம்

விருதுநகரில் காமராசரின் பிறந்த நாள் விழாவையொட்டி, அரசு சார்பில் கலெக்டர் மேகநாத ரெட்டி மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராசரின் 119 வது பிறந்தநாள் விழா அவரது சொந்த ஊரான விருதுநகரில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது..

மேலும் இந்நாள் கல்வி வளர்ச்சி நாளாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது .இந்நிலையில் தமிழக அரசு சார்பில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி காமராஜரின் இல்லத்தில் குத்துவிளக்கேற்றி அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் பெருந்தலைவரின் வரலாற்று சிறப்பு மிக்க புகைப்படக்கண்காட்சியை பார்வையிட்ட பின் கதர் ஆடையின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்குக்கும் வகையில் நூல்நூற்கும் நிகழ்வையும் பார்வையிட்டார்.

பின்னர் பொதுமக்கள் காமராசர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் பெருந்தலைவர் இல்லத்திற்கு வரும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்து வரும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!