ப்ரெய்லி எழுத்து மூலம் தேர்தல் விழிப்புணர்வு
விருதுநகர் மாட்டத்தில் ஒவ்வொரு வாக்காளர்களும் விடுபட்டு விடக்கூடாது என்பதற்காகவும், ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் அனைத்து தரப்பு வாக்காளர்களும் பங்களிக்க வேண்டும் என்பதற்காகவும், 100 சதவிகித இலக்கை கொண்டு பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இன்றைய தினம் இந்திய தேர்தல் ஆணையத்தில் அறிவுறுத்தல்படி, பார்வை திறன் குறையுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் செய்யப்பட்ட வசதிகள் குறித்து விளக்குவதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும். பார்வை திறன் குறையுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்குச்சாவடி மைய அலுவலர் மூலம் ப்ரெய்லி எழுத்தினால் வடிவமைக்கப்பட்ட வேட்பாளர் வரிசை பட்டியல் வழங்கப்பட்டு, அதனை புரிந்து கொண்டு, அதிலுள்ள வரிசை எண்கள்படி, வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள ப்ரெய்லி முறையில் உள்ள வரிசை எண்ணை தேர்வு செய்து வாக்களிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, தாங்கள் தவறாமல் வாக்களித்து மற்ற வாக்காளர்களுக்கு ஒரு உந்துகோலாக அமைய வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலரான மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து, ப்ரெய்லி எழுத்து மூலம் வடிவமைக்கப்பட்ட வாக்காளர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட்டார். தொடர்ந்து, வாக்காளர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களில் உள்ள வாசகங்களை பார்வை குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி எடுத்துரைக்க, பார்வை திறன் குறையுடையோர்கள் அனைவரும் ப்ரெய்லி முறையில் பின்பற்றி வாசித்தனர். மேலும், வாக்குப்பதிவு இயந்திரத்திலுள்ள வேட்பாளர் வரிசை பட்டியல் கொண்ட துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. அதிலுள்ள வரிசை எண்கள்படி, வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள ப்ரெய்லி முறையில் உள்ள வரிசை எண்ணை தேர்வு செய்து வாக்களிக்கும் முறை குறித்து செயல்முறை விளக்கத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையற்ற மாற்றுத்திறனாளிக்கு எடுத்துரைத்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu