காங்கிரஸ் ஆட்சியில் 1 லிட்டருக்கு 9 ரூபாய் வரி: பாஜக செய்ய முடியுமா ?

விருதுநகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அகில இந்திய காங்கிரஸ் பொது செயலாளர் மாணிக்கம் தாகூர்.
மன்மோகன் ஆட்சியில் இருந்தது போல் 1 லிட்டரில் 9 ரூபாய் வரி போட்டது போல நிர்மலாசீதாராமன் கொண்டு வர தைரியம் இருக்கிறதா என்று அகில இந்திய காங்கிரஸ் பொது செயலாளர் மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.
விருதுநகரில் நியாய விலைக்கடையை திறந்து வைத்த பின்னர், விருதுநகர் எம்பி மாணிக்கம்தாகூர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி;
ஆசீர்வாத யாத்திரை பாஜக மேற்கொள்ள இருப்பது பாஜக தமிழ் மண்ணிற்கு அவர்களுக்கும் சம்மந்தமில்லை என்பதை நிரூபித்துள்ளனர், யாத்திரை கலாச்சாரம் எப்போதும் எடுபடாது. பட்டியலின மக்களுடைய மிக முக்கியமான பிரச்னைகளை பேசாமல் 4 பேரை இணையமைச்சரை நியமித்திருப்பதை பெரிதுபடுத்துகின்றனர்.
1 ஆண்டுக்கு 3 லட்சம் கோடி வருவாய் பெட்ரோல் மூலம் பெறுகின்றனர். மன்மோகன் ஆட்சியில் இருந்தது போல் 1 லிட்டரில் 9 ரூபாய் வரி போட்டது போல நிர்மலாசீதாராமன் கொண்டு வர தைரியம் இருக்கிறதா? தற்போது லிட்டருக்கு 32 ருபாய் வரி கொண்டு வந்துள்ளது. கமலஹாசன் கருத்து நமக்கு புரிவதிலை, விஞ்ஞானிகளுக்குத்தான் புரியும்.தமிழக பட்ஜெட் இது முற்போக்கு சிந்தைனையான பட்ஜெட் என்றார் அவர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu