டெங்கு மஸ்தூர்களுக்கு பணி பாதுகாப்பு வேண்டும் :அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

டெங்கு மஸ்தூர்களுக்கு பணி பாதுகாப்பு வேண்டும் :அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்
X
டெங்கு மஸ்தூர்களுக்கு பணி பாதுகாப்பு வேண்டும் அரசு ஊழியர் சங்கம் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.

டெங்கு மஸ்தூர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டுமென அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க, விருதுநகர் மாவட்ட செயலாளர் வைரவன், மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: மாவட்டத்தில் பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் 600-க்கும் மேற்பட்ட டெங்கு மஸ்தூர்கள் பணியாற்றி வருகின்றனர். கொரோனா கட்டுப்பாட்டு பணியில் இவர்களது பங்கு சிறப்பானதாகும்.

இந்நிலையில், தற்போது அரசியல் தலையீடு காரணமாக, டெங்கு மஸ்தூர்கள் பணிநீக்கம் செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. புதிதாக பணி நியமனம் செய்யப்படுவார்கள் என மிரட்டப்படுகின்றனர். மம்சாபுரம் பேரூராட்சியில் 2 டெங்கு மஸ்தூர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எனவே, சிறப்பாக பணியாற்றும் டெங்கு மஸ்தூர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கவும், அரசியல் தலையீட்டால் அவர்கள் மிரட்டப்படுவதும் தடுக்கப்படவேண்டும். மாவட்ட நிர்வாகம் டெங்கு மஸ்தூர்களுக்கு உரிய பணிப் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai automation in agriculture