விருதுநகரில் விசாணைக்கு அழைத்த தலைமை காவலருக்கு அரிவாள் வெட்டு: வாலிபர் கைது
விசாரணைக்கு அழைத்த காவலரை அரிவாளால் வெட்டிய கூலி தொழிலாளி குமார்.
விருதுநகர் அருகே மன்னார்கோட்டையை சேர்ந்தவர் கூலி தொழிலாளி குமார். இவர் குடித்துவிட்டு ஊரில் ரகளை செய்வதாக விருதுநகர் வச்சக்காரப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து வச்சக்காரப்பட்டி தலைமைக்காவலர் முருகன் மன்னார்கோட்டைக்கு சென்று குமாரை காவல்நிலையம் வருமாறு அழைத்துள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட குமார் தலைமைக்காவலர் மூருகனின் கையை அரிவாளால் வெட்டியுள்ளார். இதனையடுத்து காயமடைந்த தலைமைக் காவலர் முருகன் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu