வீட்டில் பதுக்கிய பட்டாசால் வெடிவிபத்து: இருவர் காயம்; நால்வர் மாயம்

வீட்டில் பதுக்கிய பட்டாசால் வெடிவிபத்து: இருவர் காயம்; நால்வர் மாயம்
X

பட்டாசு வெடி விபத்தில்,  தரைமட்டமான வீட்டை தொலைவில் இருந்து பார்க்கும் அப்பகுதி மக்கள். 

சிவகாசியில், வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசு வெடித்த விபத்தில், இருவர் காயமடைந்தனர்; மேலும் நான்கு பேரை காணவில்லை.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி- ஸ்ரீவில்லிப்புத்தூர் சாலையில் உள்ள நேருஜி நகரில், நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இங்கு ராமநாதன் என்பவர், தனது சொந்த வீட்டில் குழாய் கம்பெனி நடத்தி வந்துள்ளார். சட்ட விரோதமாக பேன்சி ரக பட்டாசுகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்தார்.

இந்த நிலையில், இன்று அவரது வீட்டில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில், மொத்த கட்டிடமும் தரைமட்டமானது. இவ்விபத்தில், வேல்முருகன் மற்றும் மனோஜ்குமார் ஆகியோர் பலத்த காயமடைந்து, சிவகாசி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பஞ்சவர்ணம், கார்த்தீஸ்வரன், சமீதா உள்ளிட்ட நால்வரைக் காணாத நிலையில், தொடர்ந்து அங்கே வெடித்துக் கொண்டே இருக்கிறது.

ஆனாலும், தேடுதலில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். குழாய் கம்பெனி உரிமையாளர் ராமநாதன் தப்பி ஓடிவிட்டதாக, சிவகாசி கிழக்கு காவல்துறையினர் தரப்பில் கூறப்படும் நிலையில், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai automation in agriculture