விருதுநகர்: வடமாநிலத் தொழிலாளர்கள் 26 பேருக்கு கொரோனோ

விருதுநகர்: வடமாநிலத் தொழிலாளர்கள் 26 பேருக்கு கொரோனோ
X
விருதுநகர்: கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள வட மாநிலத் தொழிலாளர்கள் 26 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் தற்பொழுது கொரோனோ வைரஸ் இரண்டாவது அதிவேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் விருதுநகர் அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிய கட்டிடங்களுக்கான கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வட மாநிலத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களில் சிலருக்குக் காய்ச்சல் மற்றும் சளி போன்ற கொரோனோ தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டதால் 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு விருதுநகர் அரசு மருத்துவமனையில் கொரோனோ பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் 26 வட மாநிலத் தொழிலாளர்களுக்கு கொரோனோ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது . இதை அடுத்து தொற்று பாதிக்கப்பட்ட 26 வடமாநில தொழிலாளர்கள் அரசு மருத்துவமனையிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!