விருதுநகரில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு பிரச்சார வாகனம்: ஆட்சியர் துவக்கம்

விருதுநகரில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு பிரச்சார வாகனம்: ஆட்சியர் துவக்கம்
X

விருதுநகரில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாதரெட்டி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாதரெட்டி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, வேர்ல்டு விஷன் இந்தியா மற்றும் யுனிசெப் இணைந்து நடத்தும் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாதரெட்டி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, வேர்ல்டு விஷன் இந்தியா மற்றும் யுனிசெப் இணைந்து நடத்தும் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாதரெட்டி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வேர்ல்டு விஷன் இந்தியா மற்றும் யுனிசெப் இணைந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை தடுப்பூசி போட வைத்து, மாவட்டத்தில் 100% தடுப்பூசி உறுதிப்படுத்தும் பொருட்டு, தடுப்பூசி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

முன்னதாக, தடுப்பூசியின் அவசியம் மற்றும் கொரோனா நெறிமுறைகள் குறித்து துண்டு பிரசுரங்களையும் வேர்ல்டு விஷன் இந்தியாவின் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான மாநில மற்றும் மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு கையேடு வெளியிடப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) காளிமுத்து, அலுவலக மேலாளர் பரமானந்தராஜா, வேர்ல்டு விஷன் இந்தியா திட்ட அலுவலர் பாலசுப்பிரமணியன், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai solutions for small business