விளையாட்டுத்துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு கலெக்டர் பாராட்டுச்சான்றளிப்பு

விளையாட்டுத்துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு கலெக்டர் பாராட்டுச்சான்றளிப்பு
X

விளையாட்டுத்துறையில் சாதனை படைத்த விளையாட்டு வீரர்களுக்கு சான்றிதள் அளித்து பாராட்டி சான்றளித்த விருதுநகர் கலெக்டர் ஜெ.மேகநாதரெட்டி  

பஞ்சாப் அமிர்தசரஸில் நடந்த தேசிய அளவிலான சிலம்பாட்டபோட்டியில் பதக்கங்களை வென்ற 12 மாணவர்கள் பாராட்டப்பட்டனர்

விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கும், விளையாட்டுத்துறையில் சாதனை புரிந்தவர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி வழங்கினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்வில், விருதுநகர் அரசு அருங்காட்சியகமும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகமும் இணைந்து 6 முதல் 12 வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு ' எனக்கு பிடித்த சுதந்திர போராட்ட வீரர் " என்ற தலைப்பில் நடைபெற்ற ஓவியப்போட்டியில் 6 முதல் 8 வகுப்பு வரையிலான பிரிவில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் 3 பரிசுகளையும், 9 முதல் 10 வகுப்பு வரையிலான பிரிவில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் 3 பரிசுகளையும், 11 மற்றும் 12 வகுப்பு வரையிலான பிரிவில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் 3 பரிசுகளையும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

விருதுநகர் மாவட்டத்தில் இருந்து பஞ்சாப் அமிர்தசரஸில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் சிலம்பாட்டபிப் போட்டியில் கலந்து கொண்டு, பதக்கங்களை வென்ற 12 மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி பாராட்டுகளைத் தெரிவித்தார். இதில் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.மனோகரன், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.மங்களராமசுப்ரமணியன், சார் ஆட்சியர்(சிவகாசி) பிருத்திவிராஜ்,மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!