அர்பணிப்பு உணர்வோடு பணியாற்ற செவிலியர்களுக்கு அமைச்சர் அறிவுரை.

அர்பணிப்பு உணர்வோடு பணியாற்ற செவிலியர்களுக்கு அமைச்சர் அறிவுரை.
X

விருதுநகர் -அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன் கலந்து கொண்ட ஆய்வுக்கூட்டம்.

விருதுநகர் மாவட்டத்தில் ஏற்கனவே 33 மருத்துவர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக 5 மருத்துவர்கள் 110 செவிலியர்களுக்கு பணி ஆணை.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் செவிலியர்கள் அர்பணிப்பு உணர்வோடு பணியாற்ற வேண்டும் என அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிக்காக ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் செவிலியர்கள் அர்பணிப்பு உணர்வோடு பணியாற்ற வேண்டும் என்று கூறினார்.

கொரோனா நோய் தொற்று தடுப்பு பணிகளுக்காக ஒப்பந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவர்கள் 5 பேர் மற்றும் செவலியர்கள் 107 பேருக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பணி நியமண ஆணைகளை வழங்கினார்.

பின்னர் பேசிய அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் நாடு ஒரு இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது நாடு என்பதை விட நாம் மிக இக்கட்டான சூழ்நிலையில் உள்ளோம். ஒவ்வொரும் உயிரோடு இருப்பதே பெரிய விசயமாக உள்ளது.கொரோனாவை ஒழிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு அதிகாரிகள் உறுதுணையாக உள்ளனர்.ஏற்கனவே 33 மருத்துவர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக 5 மருத்துவர்கள் 110 செவிலியர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு பணிகளுக்காக கூடுதல் மருத்துவ பணியாளர்களை நியமிக்க அரசு தயாராக உள்ளது.செவிலியர்கள் அர்ப்பணிப்போடு பணியாற்ற வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்