மருத்துவ பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்க இன்னிக்கு தான் (ஆகஸ்ட் 4) கடைசி நாள்

மருத்துவ பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்க இன்னிக்கு தான் (ஆகஸ்ட் 4) கடைசி நாள்
X
விருதுநகர் மருத்துவக்கல்லூரி- கோவிட் -19 சிறப்பு பிரிவில் காலியாக உள்ள மருத்துவ பணியாளர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது

விருதுநகர் மருத்துவக்கல்லூரியில் செயல்பட்டு வரும் கோவிட் -19 சிறப்பு பிரிவில் காலியாக உள்ள மருத்துவ பணியாளர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.விண்ணப்பிக்க இன்னிக்கு தான் (ஆகஸ்ட் 4) கடைசி நாள்

விருதுநகர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியில் செயல்பட்டுவரும் கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவில் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பணிபுரிய மருத்துவ பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

காலியாக உள்ள 86 பணியிடங்களுக்கு நேர்முக தேர்வு நடைபெற உள்ளது. நுண்கதிர் வீச்சாளர், டயாலிஸ் டெக்னீசியன், இசிஜி சிடிசி டெக்னீசியன்கள், மயக்கவியல் நிபுணர், லேப் டெக்னீசியன், மருந்தாளுநர், செவிலியர், பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் என மொத்தம் 86 பணியிடங்களுகள் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களுக்கு தொகுப்பூதியமாக 12,000 முதல் 15,000 வரை வழங்கப்பட உள்ளது.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் வரும் இன்று அதாவது ஆகஸ்ட் 4-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களது சான்றிதழ்கள் விண்ணப்பங்களை மருத்துவக் கல்லூரி முதல்வர் முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வழங்கலாம். ஆகஸ்ட் 4-ஆம் தேதிக்குப் பிறகு விண்ணப்பங்கள் வாங்கபடமாட்டாது என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!