தேர்தலை புறக்கணித்த கிராமம்

தேர்தலை புறக்கணித்த கிராமம்
X
மாவட்ட நிர்வாகம் பிரச்சனைக்கு தீர்வு காணாததால் திருச்சுழி அருகே மயிலி கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு.

18 பேர் வாக்குகள் மட்டும் பதிவான நிலையில் தேர்தல் அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு ஒருவர்கூட வரவில்லை என கிராம மக்கள் குற்றச்சாட்டு.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மயிலி கிராமத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கால்வாய் பிரச்சனை நிலவி வருவதால், விவசாயத்திற்கு கால்வாயில் தண்ணீர் திறந்துவிடக் கோரி போராடி வருகின்றனர்.

பல்வேறு போராட்டங்களை நடத்தியும் ரேஷன் கார்டுகளை வட்டாட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டும் இதுவரை மாவட்ட நிர்வாகம் பிரச்சனைக்கு தீர்வு காணாததால், தேர்தல் புறக்கணிப்பு செய்யப் போவதாக ஏற்கனவே கருப்புக் கொடி கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று அந்த ஊரில் உள்ள வாக்குச்சாவடியில் 18 வாக்காளர் மட்டுமே வாக்களித்த நிலையில் மீதம் உள்ள வாக்காளர்கள் வாக்களிக்க செல்லாமல் வீட்டிலேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு தேர்தலைப் புறக்கணித்தனர். கால்வாய் பிரச்சினைக்கு சுமூக தீர்வு காணாமல், தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றப் போவதில்லை என உறுதிபட தெரிவித்தனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!