வேளாண் மாணவர்களின் விவசாயிகளுக்கான மண் வளப் பாதுகாப்பு பயிற்சி

வேளாண் மாணவர்களின் விவசாயிகளுக்கான மண் வளப் பாதுகாப்பு பயிற்சி
X

கலசலிங்கம் வேளாண்மைத் துறை மாணவர்கள் சார்பில் புல்லூர் கிராம விவசாயிகளுக்கு ‘மண் வளம் பாதுகாப்பு பயிற்சி’ நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கலசலிங்கம் வேளாண் கல்லூரி மாணவர்கள் சார்பில் விவசாயிகளுக்கு மண் வளப் பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டார வேளாண்மை துறை அதிகாரிகள் மூலம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கலசலிங்கம் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை கல்லூரியின் இறுதி ஆண்டு இளநிலை வேளாண்மை துறை மாணவர்கள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று வருகின்றனர்.

கலசலிங்கம் வேளாண்மைத் துறை மாணவர்கள் சார்பில் புல்லூர் கிராம விவசாயிகளுக்கு 'மண் வளம் பாதுகாப்பு பயிற்சி' நடைபெற்றது.

இப்பயிற்சியின் போது இறுதி ஆண்டு இளநிலை வேளாண்மை துறை மாணவர்கள் சிவநந்தா, சீனிவாசன், வீரமணிதங்கம், கருப்புச்சாமி ஆகியோர் கொண்ட குழுவினர், பேராசிரியர் சதீஷ்குமார் தலைமையில் மண் வளம் பாதுகாப்பு, மண் பரிசோதனை மற்றும் மண் மாதிரிகள் எடுக்கும் முறைகள் குறித்தும் பயிற்சியை விவசாயிகளுக்கு வழங்கினர்.

காரியாபட்டி வேளாண்மை உதவி இயக்குனர் செல்வராணி, துணை வேளாண்மை அலுவலர் தெய்வம், வேளாண்மை உதவி அலுவலர் மகாராணி, வேளாண் அறிவியல் நிலைய வானவியல் துறை பேராசிரியர் அருண்குமார், வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராஜேஷ், உதவி வட்டார தொழில்நுட்ப மேலாளர் வீரபாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர். இப்பயிற்சியில் புல்லூர் விவசாயிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!