கரியநேந்தலில் 6 லட்சத்தி 58 ஆயிரம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்

குட்கா, பான்மசாலா பொருட்கள்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள கல்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரபாரதி (39). இவர் காரியனேந்தல் கிராமத்தில் அவருக்கு சொந்தமான வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்ற போதைப் பொருள்களை குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு சில்லரை வியபாரிகளுக்கு விற்பனை செய்ய பதுக்கி வைத்திருப்பதாக மல்லாங்கிணறு காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் அடிப்படையில் மல்லாங்கிணறு காவல் சார்பு ஆய்வாளர் சஜீவ் தலைமையிலான போலீசார் கரியனேந்தல் கிராமத்தில் ஆய்வில் ஈடுபட்ட பொழுது, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 லட்சத்து 58 ஆயிரத்து 200 ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை மூட்டை மூட்டையாக கைப்பற்றின.
இதுகுறித்து நடத்திய விசாரணையில் கல்குறிச்சி சார்ந்த சுந்தரபாரதி மற்றும் கரியனேந்தல் கிராமத்தைச் சார்ந்த முருகன் என்ற இருவரையும் கைது செய்து மல்லாங்கிணர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu