காரியாபட்டியில் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 50,000 திருட்டு: சிசிடிவி பதிவு மூலம் போலீஸார் விசாரணை

காரியாபட்டியில்  இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 50,000  திருட்டு: சிசிடிவி பதிவு மூலம் போலீஸார் விசாரணை
X
காரியாபட்டியில் தனியார் வங்கியிலிருந்து எடுத்த ரூ 50 ஆயிரத்தை தனது இருசக்கர வாகனத்தில் சீட்டுக்கு அடியில் வைத்துவிட்டு, காய்கறி வாங்கச் சென்றுவிட்டு திரும்பி வந்த போது பணம் திருடுபோனது

காரியாபட்டியில் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 50 ஆயிரம் திருட்டு: சிசிடிவி பதிவுகள் மூலம் போலீஸார் விசாரணை

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியை சேர்ந்த மொபின் ஜாக்சன் (33). இவர் இன்று காரியாபட்டியில் இயங்கி வரும் தனியார் வங்கி கிளையில் இருந்து ரூ 50 ஆயிரத்தை எடுத்து தனது இருசக்கர (டிவிஎஸ் ஜூபிடர்) வாகனத்தில் சீட்டுக்கு அடியில் உள்ள பெட்டியில் வைத்துவிட்டு, வங்கியின் அருகிலிருந்த காய்கறி கடைக்கு சென்று விட்டு, பத்து நிமிடம் கழித்து வந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தில் இருந்த ரூ.50 ஆயிரம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது தொடர்பாக, காரியாபட்டி காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின்பேரில் போலீஸார் அப்பகுதியில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டிருருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது ல் சுமார் 35 வயது முதல் 40 வயது மதிக்கத்தக்க இரு நபர்கள் இருசக்கர வாகனத்தில் இருந்த பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த போலீஸார் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இருவரையும் தேடி வருகின்றனர். காரியாபட்டியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளபகுதியில் பகல்வேளையில் வாகனத்தில் வைத்திருந்த பணம் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!