காரியாபட்டி அரசு பள்ளி பராமரிப்பு: சமூக ஆர்வலர் தத்தெடுப்பு

காரியாபட்டி அரசு பள்ளி பராமரிப்பு: சமூக ஆர்வலர் தத்தெடுப்பு
X

காரியாபட்டியை சேர்ந்த சமூக ஆர்வலர் அழகர்சாமி அரசு பெண்கள் பள்ளியின் சுகாதாரத்தை பராமரிக்கும் பணியை தத்தெடுத்துள்ளார்.

காரியாபட்டியை சேர்ந்த சமூக ஆர்வலர் அழகர்சாமி அரசு பெண்கள் பள்ளியின் சுகாதாரத்தை பராமரிக்கும் பணியை தத்தெடுத்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை சேர்ந்த சமூக ஆர்வலர் அழகர்சாமி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் சுகாதாரத்தை முழுமையாக பராமரிக்கும் பணியை தத்து எடுத்து சமூக சேவை செய்யும் மற்ற தன் ஆர்வலர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக இது போன்ற சமூகப் பணிகளை செய்து வருகிறார் அழகர்சாமி. கிராமப் பெண்கள் மேம்பாட்டு திட்டம், கிராம பெண்கள் சுகாதாரத் திட்டம், கிராம பொருளாதார மேம்பாட்டு திட்டம் என்று பல்வேறு திட்டங்களை தனி ஒருவராக நின்று செயல்படுத்தி இருக்கிறார். இது போன்ற பணிகளுக்காக தமிழக முதல்வர் விருதும் பெற்றிருக்கிறார்.‌

இந்நிலையில் கடந்த ஒன்றரை வருடகாலமாக கொரோனா காலத்தில் மக்களை பாதுகாக்கும் பணியில் பல்வேறு சேவைகளை செய்து வருகிறார்.‌ உதாரணமாக இதுவரை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முகக் கவசங்களையும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சானிடைசர் பாட்டில்களையும் இலவசமாக வழங்கி இருக்கிறார். தற்போது தமிழகமெங்கும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்களுக்கு மிக முக்கியமானதாக கருதப்படும் சுகாதாரத்தைப் பராமரிப்பதற்கு காரியாபட்டி அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியை முழுவதுமாக தத்தெடுத்து இருக்கிறார்.

இதுகுறித்து அழகர்சாமி கூறியதாவது; தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. விரைவில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளும் திறக்கப்படும் அதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.‌ இந்த நிலையில் மாணவர்களின் சுகாதாரத்தையும் சுத்தத்தையும் பராமரிப்பது மிக அவசியம். எனவே மாணவர்களுக்கு தேவையான அனைத்து விதமான பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்குவதற்காக முடிவு செய்திருக்கிறேன்.‌ அந்த வகையில் இப்போது நாங்கள் இந்த பள்ளிக்கு தேவையான முகக் கவசங்களையும் சானிடைசர் பாட்டில்களையும் வழங்கியிருக்கிறன். பள்ளி வளாகத்தை சுத்தப்படுத்துதல், பள்ளி வளாகத்தில் கிருமிநாசினி தெளித்தல் போன்றவற்றையும் செய்து இருக்கிறோம். இது ஒரு முறையோடு நின்றுவிடாமல் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் குறைந்தபட்சம் மாதம் ஒருமுறை இப்பணிகளை இதே பள்ளியில் மேற்கொள்ள இருக்கிறேன்.‌ இதனால் மாணவர்களிடையே தொற்று பரவாமல் பாதுகாக்க முடியும் என்றார்.

ஒவ்வொரு ஊரிலும் செயல்படும் சமூக ஆர்வலர்கள் இப்படி பள்ளியை தத்தெடுத்தது சுகாதாரத்தை பராமரித்தால் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

Tags

Next Story