திருச்சுழி அருகே இறந்தவரின் உடலை இடுப்பளவு தண்ணீரில் எடுத்து செல்லும் அவலம்
திருமாணிக்கனேந்தல் கிராமத்தில் இறந்தவரின் உடலை இடுப்பளவு நீரில் மயானத்திற்கு எடுத்து செல்லும் கிராம மக்கள்.
திருச்சுழி அருகே திருமாணிக்கனேந்தல் கிராமத்தில் இறந்தவரின் உடலை இடுப்பளவு நீரில் மயானத்திற்கு எடுத்துச் செல்லும் கிராம மக்களின் அவலம் மேம்பாலம் கட்டித்தர கிராம மக்கள் கோரிக்கை
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட உலக்குடி கிராமத்தில் வைகை அணை திறப்பின் காரணமாக கிருதுமால் நதியில் நீர்வரத்து அதிகமாக சென்று சென்று கொண்டிருப்பதாலும் திருச்சுழியை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கிருதுமால் நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.இந்த நிலையில் உலக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட திருமாணிக்கனேந்தல் கிராமத்தில் பாலாயி (வயது 75) என்பவர் வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்தார்.
அவரை அடக்கம் செய்வதற்காக உலக்குடி மயானத்திற்கு கிருதுமால் நதியின் ஆற்றை கடந்து கொண்டு செல்லவேண்டிய நிலை இருப்பதால் கிருதுமால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் இறந்துபோன பாலாயின் உடலை இடுப்பளவு நீரில் கயிறு கட்டிகொண்டு 30க்கும் மேற்பட்டோர் சுமந்துகொண்டு சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக போராடி ஆற்று வெள்ளத்தை கடந்து இறந்தவரின் உடலை சுடுகாட்டிற்கு கொண்டுவந்து இறுதிசடங்குடன் அடக்கம் செய்தனர்.
திருமாணிக்கனேந்தல் கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் இந்த கிராமத்தில் இருந்து அத்தியாவசிய தேவை முதல் இறுதிச்சடங்கிற்கு மயானம் வரை உலக்குடி செல்ல இந்த ஆற்றை கடந்து செல்ல வேண்டிய நிலை இருப்பதால் மழைக் காலங்களிலும் இதுபோல் அணைகளை இறக்கும்போது அபாயமான முறையில் ஆற்றை கடக்க வேண்டிய நிலை தங்கள் கிராம மக்களுக்கு இருப்பதாகவும் தங்களுக்கு மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து கிருமால் நதியை கடக்க மேம்பாலம் கட்டி தர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கை.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu