மனைவி திட்டியதால் விரக்தி- கணவர் தற்கொலை

மனைவி திட்டியதால் விரக்தி- கணவர் தற்கொலை
X

திருச்சுழி அருகே மது அருந்துவதை கண்டித்ததால் கூலி தொழிலாளி மதுவில் பூச்சி மருந்தை கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே குலசேகரநல்லூரைச் சேர்ந்த கூலி தொழிலாளியான முருகனுக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளனர். முருகன் அடிக்கடி மது அருந்தி விட்டு தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று மது குடித்ததை அவரது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இதனால், தகராறு ஏற்பட்ட நிலையில் மனமுடைந்த முருகன் மதுவில் பூச்சிகொல்லி மருந்தை கலந்து குடித்ததாக கூறப்படுகிறது. இதில் உயிருக்கு போராடிய முருகனை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயரிழந்தார். சம்பவம் குறித்து திருச்சுழி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!