விருதுநகர் மாவட்டத்தில் அனல் பறந்த ஜல்லிக்கட்டு: ஆர்வமுடன் பங்கேற்ற மாடுபிடி வீரர்கள்

விருதுநகர் மாவட்டத்தில் அனல் பறந்த ஜல்லிக்கட்டு: ஆர்வமுடன் பங்கேற்ற மாடுபிடி வீரர்கள்
X

திருச்சுழி அருகே உள்ள நெல்லிக்குளம் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி.

திருச்சுழி அருகே நெல்லிக்குளத்தில் வீரன்சூரன் திருக்கோயில் சித்திரைப் பொங்கல் புரவி எடுப்பு விழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி வெகுவிமரிசையாக நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள நெல்லிக்குளம் கிராமத்தில் அருள்மிகு வீர சூரன் அரியநாச்சி அம்மன் கருப்பசாமி திருக்கோயில் சித்திரை மாத பொங்கல் மற்றும் புரவி எடுப்பு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக ஜல்லிக்கட்டு போட்டி தலைமுறை தலைமுறையாக நடைபெற்று வருகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊரடங்கு காரணமாக திருவிழா நடைபெறாமல் இருந்த நிலையில் இந்த ஆண்டு வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் முன்பதிவு செய்த நிலையில் 350 ஜல்லிக்கட்டு காளைகள் மட்டுமே வாடிவாசலில் களம் இறக்கப்பட்டன.

அதேபோல் மாடுபிடி வீரர்கள் சுமார் 250 பேர் கலந்து கொண்டனர். ஒவ்வொரு சுற்றுக்கும் தலா 25 பேர் வீதம் 10 சுற்றுகள் மூலமாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. வாடிவாசலில் சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கி தங்களது திறமையை வெளிப்படுத்தினர். மாடுகளை அடக்கிய வீரர்களுக்கு பீரோ, கட்டில் ,குக்கர், வெள்ளி அண்டா மற்றும் குடம், ஏர்கூலர் மிஷின், செல்போன் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டன.

அதேபோல் பிடிபடாத உள்ளூரை சேர்ந்த காளையான கட்டப்பா, வெளியூர் காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்களுக்கு காயமின்றி போட்டி நடைபெற்றது. மேலும் மதுரை ஏர்ப்போர்ட் வலையங்குளம் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மாடுபிடி வீரர்கள் அதிகளவு பங்கேற்று பரிசுகளை பெற்று சென்றுள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த ஜல்லிக்கட்டு போட்டி இந்த நடைபெற்றதால் இப் போட்டியை காண உள்ளூர் வெளியூர் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசித்தனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil