திருச்சுழியில் அரசு பேருந்து மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு: போலீசார் விசாரணை

திருச்சுழியில் அரசு பேருந்து மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு: போலீசார் விசாரணை
X

திருச்சுழி திருமேனிநாதர் கோவில் பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற பேருந்து மீது கல்வீசி கண்ணாடி உடைந்தது தாெடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சுழி திருமேனிநாதர் கோவில் பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற பேருந்து மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு.

திருச்சுழி திருமேனிநாதர் கோவில் பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற பேருந்து மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு காவல்துறையினர் விசாரணை.

விருதுநகர் மாவட்டம் நரிக்குடியில் இருந்து திருச்சுழி வழியாக அருப்புக்கோட்டை நோக்கி சென்ற அரசு பேருந்து திருச்சுழி ஸ்டேட் பேங்க் நிறுத்த முன்பு அரசு பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றி விட்டு சென்றுள்ளது. பேருந்துக்குள் அதிக பயணிகள் படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்துள்ளனர்.

இதையடுத்து திருமேனிநாதர் கோவில் முன்பு உள்ள பேருந்து நிலையத்தில் சுமார்15 பள்ளி மாணவர்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் பேருந்திற்காக காத்துக்கொண்டிருந்தன. ஏற்கனவே அதிக கூட்டம் இருந்ததால் அரசு ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் சென்றதாக கூறப்படுகிறது. திருமேனிநாதர் கோவில் பேருந்து நிலையத்தில் காத்திருந்த கூட்டத்தில் இருந்த ஒருவர் அரசு பேருந்தின் பின்புறம் கல்லால் தாக்கியுள்ளார்.

இதில் பேருந்தின் பின்புற கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. இதை அறிந்த பேருந்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி திருச்சுழி காவல்துறைக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த காவல்துறையினர் பேருந்துக்காக காத்திருந்த கூட்டத்திலிருந்து கல்வீசியது யார் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி