எடப்பாடி பழனிச்சாமி ஒரு பச்சோந்தி : டிடிவி தினகரன் பேச்சு
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் சிவசாமியை ஆதரித்து அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் காரியாபட்டி பேருந்து நிலையம் முன்பு திறந்த வேனில் நின்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது பேசிய டிடிவி தினகரன்
தற்போது நடப்பது சந்தர்ப்பவாத ஆட்சியா துரோகிகளின் ஆட்சியா என ஊர் ஊராக பேசிவருகிறேன் அதையே திமுகவினரும் பேசி வருகின்றனர்ஸ்டாலின் கேட்கிறார் பல்லி மாதிரி ஊர்ந்து செல்கிறார்என அதற்கு முதல்வர் சொல்கிறார் நான் என்ன பாம்பா பல்லியா என ஊர்ந்து செல்ல என கேட்கிறார்
பாம்பு பல்லியாக இருந்தால் தூக்கு போட்டு தொங்கியிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி ஒரு பச்சோந்தி அண்டப் புழுகர் ஆகாச புழுகர் எடப்பாடி புழுகர்இந்த தேர்தல் முடிந்ததும் நான் எடப்பாடி பழனிச்சாமியே இல்லை என்பார் திருச்சுழியில் 25 கோடி இறக்கியிருப்பார்கள் ஆளுங்கட்சியினர் ஆர்.கே நகரில் மாபெரும் வெற்றி பெற்றோம் அம்மாவின் உண்மையான ஆட்சியை கொண்டு வருவதற்காகதான் ஆர்.கே நகர் மக்கள் என ஓட்டளித்தார்கள்கட்டை விரலை உயர்த்தி காண்பித்தது ஆர்கே நகரில் இருந்து தான் அதுவரை இரட்டை இலை சின்னத்தைதான் காண்பித்து வந்தேன் பேசும்போதே சரியாகதான் பேசுவேன்
பன்னீர் செல்வம் போல பல்டி அடிக்க மாட்டேன் விசாரணை கமிசன் வைக்கவேண்டும் என பேசிய பன்னீர் செல்வம் தற்போது அமைதியாக உள்ளார்பொய் பிரச்சாரத்தில் திமுகவை அடித்துக்கொள்ள ஆள் இல்லை ஆனால் திமுகவினரே அதிமுகவினரை பார்த்து அசந்து விட்டார்கள் பொய்பிரச்சாரத்தை சசிகாலாவின் மீது வைத்ததே திமுகதான்
திமுகவினர் எப்படி நீட் தேர்வை ஒழிப்பார்கள் நீட் தேர்வை கொண்டு வந்ததே திமுகதான் காவேரி பிரச்சனைக்கும் காரணம் திமுகதான் திமுகவினர் ஆட்சிக்கு வந்தால் உங்கள் உடமைகள் காணாமல் போகிவிடும் வியாபாரிகள் நிம்மதியாக வியாபாரம் செய்ய முடியாது
நேர்மையான ஆட்சி வெளிப்படையான ஆட்சி வேண்டும் என்றால் நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் குக்கர் திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் கால்வாய் திட்டங்கள் நிறைவேற்றப்டும் அரசு கலைக்கல்லூரி கொண்டு வரப்படும் உங்கள் பணம் உங்களிடம் வரும் ஆர்கே நகர் மக்கள் போல் எதிர்கட்சிகளின் கதையை முடித்து விடுங்கள் என உரையை நிறைவு செய்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu