தனியார் கோவிலில் உண்டியல் உடைத்து திருட்டு; மர்ம நபர்களுக்கு பாேலீசார் வலைவீச்சு

தனியார் கோவிலில்  உண்டியல் உடைத்து திருட்டு; மர்ம நபர்களுக்கு பாேலீசார் வலைவீச்சு
X

காரியாபட்டியில் தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமான சக்தி மாரியம்மன் கோவில்.

காரியாபட்டியில் தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமான சக்தி மாரியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு.

காரியாபட்டியில் தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமான சக்தி மாரியம்மன் கோவிலில் சுவர் ஏறி குதித்து உண்டியலை உடைத்து பணம் திருட்டு காவல்துறையினர் விசாரணை.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியிலிருந்து கள்ளிக்குடி செல்லும் சாலையில் தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமான சக்தி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது இந்த கோவிலில் நேற்று இரவு பூஜை முடிந்து கோவில் பூசாரி கோவிலை நடைஅடைத்து சென்றுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை பூஜைக்காக பூசாரி கோவிலை திறந்த பொழுது கோவிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டது இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த கோவில் பூசாரி காரியாபட்டி காவல்துறைக்கு தகவல் அளித்தார் தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் உதவியுடன் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.

இந்த கோவிலில் உண்டியல் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்ட நிலையில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக திறக்கப்படாத நிலையில் தற்போது இரண்டு ஆண்டுகள் காணிக்கையாகச் செலுத்தப்பட்ட தொகை திருடு போயிருப்பது அப்பகுதியில் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
why is ai important to the future