கட்சி பாகுபாடின்றி கைகுலுக்கிய வேட்பாளர்கள்

கட்சி பாகுபாடின்றி கைகுலுக்கிய வேட்பாளர்கள்
X

திருச்சுழியில் வேட்பு மனு தாக்கலின் போது சந்தித்துக்கொண்ட திமுக வேட்பாளர் மற்றும் அதிமுக கூட்டணி வேட்பாளர் கைகுலுக்கி சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்கு வேட்பாளர்கள் மனுத்தாக்கல் இரண்டாவது நாளாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்து விட்டு திரும்பிய திமுக வேட்பாளர் தங்கம்தென்னரசு எதிர்பாராதவிதமாக அதிமுக கூட்டணியை சேர்ந்த மூவேந்தர் முன்னேற்ற கழக வேட்பாளர் ராஜசேகர் வேட்புமனு தாக்கல் செய்ய எதிரே நடந்து வந்தார்.

இருவரும் சந்தித்துக் கொண்ட போது கட்சி வேறுபாட்டை மறந்து இருவரும் கைகுலுக்கி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். இந்த சம்பவம் அங்கிருந்தவர்கள் மத்தியில் மகிழ்ச்சியிலும் நெகிழ்ச்சி ஏற்படுத்தியது. தொடர்ந்து மூவேந்தர் முன்னேற்ற கழக வேட்பாளர் ராஜசேகர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிமுக கூட்டணி சார்பாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.

Tags

Next Story
கல்வி கடனை வசூலித்த பின் ஏஜென்சி மூலம் மிரட்டல்: ஐ.ஓ.பி., வங்கிக்கு ரூ.5 லட்சம் அபராதம்!