ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது
X
கைது செய்யப்பட்ட நவீன் குமார்.
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள லட்சுமியாபுரம் பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 30 ).இவர் கோயம்புத்தூர் பகுதியில் கார் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் இவர் அப்பகுதியிலுள்ள தனது உறவுகார பெண்ணான ( தங்கை முறை) பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவரது தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தொடர் விசாரணையில் ஈடுபட்ட காவல்துறையினர் நவீன்குமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!