ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை:  இளைஞர் கைது
X

கைது செய்யப்பட்ட மணிகண்டன்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாப்பட்டி வ.உ.சி தெருவில் வீட்டில் தனியாக 65 வயதான பாப்பா என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இதை அறிந்த அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற இளைஞர் மூதாட்டி வீட்டில் இரவில் தனியாக இருந்த போது வீட்டிற்குள் நுழைந்து மூதாட்டியை பாலியலில் ஈடுபட முயன்றுள்ளார்.

பின்னர் துணியால் கழுத்தை இறுக்கி கொலை செய்ய முயற்சித்து விட்டு மணிகண்டன் ஓடிய நிலையில் காயமடைந்த மூதாட்டி வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் மூதாட்டியை பாலியல் செய்ய முயன்றதாகவும் ,கொலை செய்ய முயன்றதாகவும் மணிகண்டன் என்ற வாலிபரை கூமாப்பட்டி காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!