ஸ்ரீவில்லிபுத்தூரில் கஞ்சா வைத்திருந்த பெண் கைது

ஸ்ரீவில்லிபுத்தூரில் கஞ்சா வைத்திருந்த பெண் கைது
X
பைல் படம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் சட்ட விரோதமாக கஞ்சா வைத்திருந்த பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வைத்தியலிங்கபுரம் உள்ளது. அந்த பகுதியில் வன்னியம்பட்டி சப்இன்ஸ்பெக்டர் திவ்யா ரோந்து பணியில் ஈடுபட்டார்.

அப்போது வைத்திலிங்கபுரம் மாரியம்மன் கோவில் அருகே சந்தேகம் அளிக்கும் வகையில் பெண் ஒருவர் நின்று கொண்டு இருந்தார்.

அவரிடம் விசாரணை நடத்திய போது அதே பகுதியை சேர்ந்த பேச்சியம்மாள் (வயது 52) என்பதும், விற்பனைக்காக 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து வன்னியம்பட்டி போலீசார் பேச்சியம்மாளை கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி