விருதுநகர்: கிருஷ்ணன்கோவில் ஆதி திராவிடர் மாணவர்கள் விடுதியில் அமைச்சர் ஆய்வு
விருதுநகரில் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேட்டி.
ஆதிதிராவிட நலத் துறையில் ஆரம்ப கட்டத்தில் இருப்பதை விட தற்போது மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேட்டி.
விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியை அந்த துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், விருதுநகர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளை ஆய்வு செய்து வருகிறோம்.கல்வி கல்வி சார்ந்த திட்டங்களுக்கு தமிழக அரசு 85 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. ஆதிதிராவிட நலத் துறையில் ஆரம்ப கட்டத்தில் இருப்பதை விட தற்போது மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
மாணவர் எண்ணிக்கை அதிகரிக்க ஒவ்வொரு பள்ளி மட்டும் விடுதியில் ஆய்வு செய்து மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும் சேதம் அடைந்துள்ள ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu