விருதுநகர்: அதிமுக எம்எல்ஏ மீது மகளிர் அணி நிர்வாகி பரபரப்பு குற்றச்சாட்டு
அதிமுக மகளிரணி பொறுப்பாளர் ரீட்டா.
ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக எம்எல்ஏ மீது மகளிர் அணி பொறுப்பாளர் பரபரப்பு குற்றச்சாட்டு.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக எம்எல்ஏ மான்ராஜ் தன்னைப்பற்றி அருவருக்கத்தக்க வகையில் எம்எல்ஏவின் நெருங்கிய தோழியுடன் செல்போனில் பேசிய செயல் தன்னை தற்கொலை முடிவுக்கு தூண்டியதாகவும் மேலும் எம்எல்ஏ தரப்பு தனக்கு கொலைமிரட்டல் விடுத்ததாகவும் காவல் நிலையத்தில் ஆன்லைனில் புகார் செய்துள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனவர் மான்ராஜ். இவர் போட்டியிட்ட தேர்தலின்போது ஸ்ரீவில்லிபுத்தூர் ரைட்டன்பட்டி தெருவை சேர்ந்த அதிமுக மகளிரணி பொறுப்பாளர் ரீட்டா என்ற பெண்மணி மான்ராஜ் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வேலை பார்த்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் எம்.எல்.ஏ விடம் ஏற்கனவே பழகி வந்ததாக கூறப்படும் இன்னாசியம்மாள் சென்ற பெண்ணிடம் பேசியதாக சமூக வலைதளங்களில் ஆடியோ சில வெளியானது. அதில் எம்எல்ஏ மான்ராஜ் இன்னாசியம்மாளிடம் பேசும்போது ரீட்டா என்ற பெண்ணை பற்றி பேசிய ஆடியோவும் அடக்கமாகும். அதில் ரீட்டாவின் உடல் மற்றும் நடத்தைகளை பற்றி எம்எல்ஏ மான்ராஜ் பேசிய வார்த்தைகளை கேட்ட ரீட்டா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக எம்எல்ஏ மனைவியும் மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவருமான வசந்தி என்பவரிடம் ரீட்டா புகார் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து ரீட்டாவிற்கு எம்எல்ஏ தரப்பிலிருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிமுக தலைமையிடம் புகார் அளித்தும் பயனில்லை என்ற நிலையில் ஆன்லைன் மூலம் ஸ்ரீவில்லிபுத்தூர் காவல்நிலையத்திற்கு ரீட்டா புகார் மனு அனுப்பியுள்ளார்.
அதில் எம்எல்ஏ தன்னை இழிவாக பேசியதால் தன்னால் வெளியில் நடமாட முடியவில்லை என்றும் இதனால் தன்னுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் மேலும் மேற்படி ஆடியோ குறித்து ஏதும் வெளியானால் கொலை செய்துவிடுவதாக எம்எல்ஏ தரப்பு தன்னை மிரட்டி வருவதாக கூறியிருக்கிறார். தொடர்ந்து இன்று செய்தியாளர்களை சந்தித்த ரீட்டா எம்எல்ஏவின் அவதூறு பிரச்சாரம் தன்னை தற்கொலைக்கு கொண்டிருப்பதாகவும் ஆகையால் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu