பேருந்தில் முக கவசம் அணியாத பயணிகள்: நடுராேட்டில் இறக்கிவிட்ட சுகாதார ஆய்வாளர்

பேருந்தில் முக கவசம் அணியாத பயணிகள்: நடுராேட்டில் இறக்கிவிட்ட சுகாதார ஆய்வாளர்
X

ஸ்ரீவில்லிப்புத்தூரில் பேருந்தில் முக கவசம் அணியாத பயணிகளை சுகாதார ஆய்வாளர் நடுரோட்டில் இறக்கிவிட்டார்.

ஸ்ரீவில்லிப்புத்தூரில் பேருந்தில் முக கவசம் அணியாத பயணிகளை நடுரோட்டில் இறக்கிவிட்ட சுகாதார ஆய்வாளர்.

ஸ்ரீவில்லிப்புத்தூரில் பேருந்தில் முக கவசம் அணியாத பயணிகளை நடுரோட்டில் இறக்கிவிட்ட சுகாதார ஆய்வாளர்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஒமிக்ரான் வைரஸ் தாக்கம் பரவத் துவங்கி உள்ளது.தமிழகத்தில் இதுவரை 30 ற்கும் மேற்பட்டோர் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் வைரஸை கட்டுப்படுத்த ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு என்பது அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் ஒமிக்ரான் வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு அதிகாரிகளுடன் ஆலோசனைகளும் நடத்தி வருகிறது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி சுகாதார ஆய்வாளர் சுரேஷ் அவர்கள் ஸ்ரீவில்லிப்புத்தூரில் அனைத்து பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களில் ஆய்வு செய்தார்.

அப்போது பேருந்துகளில் முக கவசம் அணியாத பயணிகளை நடுரோட்டில் இறங்கி விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பேருந்துகளில் அதிகாரிகளை பார்த்தவுடன் முக கவசம் அணியாத பயணிகள் வேக வேகமாக முக கவசத்தை அணிந்தனர்.

Tags

Next Story