விருதுநகர் மாவட்டத்தில் காவலர் குடும்பத்திற்கு காவல்துறையினர் நிதியுதவி

விருதுநகர் மாவட்டத்தில் காவலர் குடும்பத்திற்கு காவல்துறையினர் நிதியுதவி
X
விருதுநகர் மாவட்டத்தில் மாரடைப்பால் இறந்த காவலர் குடும்பத்திற்கு காவல் துறை சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது

விருதுநகரில் காவலர் குடும்பத்துக்கு காவல்துறையினர் நிதியுதவி

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் உட்கோட்டம் மல்லி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தவர் முதல் நிலை காவலர் முத்துக்குமார் . இவர் கடந்த 2011 - ம் ஆண்டு காவல் பணியில் சேர்ந்து திருச்சி மாவட்டம் மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் பணிபுரிந்துள்ளார் . இந்நிலையில் கடந்த 29.11.2021 - ம் தேதி மாரடைப்பால் இறந்துவிட்டார்

தகவல் தெரிந்த அவருடன் 2011 - ம் ஆண்டு காவல் துறையில் பணியில் சேர்ந்த அவரது பேட்ச் நண்பர்கள் அனைவரும் தங்களது வாட்ஸ்ஆப் மற்றும் டெலிகிராமில் 2011 பேட்ச் காக்கி உதவும் கரங்கள் குழு மூலம் ஒன்றிணைந்து, முத்துக்குமார் குடும்பத்தினருக்கு உதவும் வகையில் அனைத்து மாவட்டத்திலும் உள்ள நண்பர்கள் இணைந்து 19 - வது பங்களிப்பாக வசூல் செய்யப்பட்ட ரூ .24,00,002 ல் அவரது மகன் , மனைவி மற்றும் பெற்றோர்கள் பெயரில் நிரந்தர வைப்பு தொகையாக ரூ .23,26,608 மும், மீதமுள்ள ரூ .73,394 த்தை ரொக்கமாகவும் அவர்களது குடும்பத்தாரிடம் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம். மனோகர் மூலம் வழங்கினார்கள் . இந்நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் 2011 - பேட்ச் காவலர்களும் கலந்து கொண்டனர் .

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது