இன்னும் 20 ஆண்டுகளுக்கு ஸ்டாலின் தான் முதல்வர்: அமைச்சர் ராமச்சந்திரன் பேச்சு

இன்னும் 20 ஆண்டுகளுக்கு ஸ்டாலின் தான் முதல்வர்: அமைச்சர் ராமச்சந்திரன் பேச்சு
X

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வ.புதுப்பட்டி பேரூராட்சி திமுக மற்றும் கூட்டணி கட்சி  வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன்

ஒழுங்காக கட்சி நடத்தக்கூடிய தலைமையைக் கொண்ட கட்சி திமுக மட்டும்தான் என்றார் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்..ராமச்சந்திரன்.

இன்னும் 20 ஆண்டுகளுக்கு ஸ்டாலின் தான் முதல்வராகத் தொடர்வார் என்றார் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன்.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வ.புதுப்பட்டி பேரூராட்சி திமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்..ராமச்சந்திரன் பேசியதாவது:இன்னும் 20 ஆண்டுகளுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் தான் முதல்வராக இருப்பார்.மற்ற கட்சிகள் யார் தலைவர் என்பதில் சண்டை போட்டு கொள்வதிலேயே நேரம் சரியாக உள்ளது .தற்போது சசிகலா நான் தான் தலைவர் என கூறிக்கொண்டு வருகிறார். ஒழுங்காக கட்சி நடத்தக்கூடிய தலைமை திமுக மட்டும்தான் என்றார் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்..ராமச்சந்திரன்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!