ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் ஸ்ரீ ரங்க மன்னார் திருக்கல்யாண வைபவம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் ஸ்ரீ ரங்க மன்னார் திருக்கல்யாண வைபவம்
X
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் ஸ்ரீ ரங்க மன்னார் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் ஸ்ரீ ரங்க மன்னார் திருக்கல்யாண சிறப்பாக நடைபெற்றது

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்க மன்னார் திருக்கல்யாண உற்சவம் கோவிந்தா கோவிந்தா என்ற கோஷம் முழங்க சிறப்பாக நடைபெற்றது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் ஒவ்வொரு தமிழ் வருடமும் பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரம் அன்று ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்க மன்னாருக்கு திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக கொடியேற்றத்துடன் தொடங்கிய திருக்கல்யாண விழா பக்தர்கள் அனுமதி இல்லாமல் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் இந்த வருடத்திற்கான திருக்கல்யாண உற்சவம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாலை மாற்றும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. திருக்கல்யாண உற்சவமானது ஆடிப்பூர கொட்டகையில் வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத சிறப்பாக நடைபெற்றது. கல்யாணத்திற்கான சீர்வரிசைகளை பெரியாழ்வாரின் சார்பில் கோவில் நிர்வாகத்தினர் மணமேடைக்கு கொண்டுவர, அதனை பெற்றுக்கொண்ட அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை நடைபெற்றது. தொடர்ந்து கன்னிகாதானம் நடைபெற்ற நிலையில் பக்தர்களின் முன்னிலையில் திருமாங்கல்ய தாரணம் நடைபெற்றது.

இந்நிகழ்வின் போது பக்தர்கள் "கோவிந்தா கோவிந்தா " என்று முழங்க அர்ச்சகர் வாசுதேவ பட்டர் ஸ்ரீரங்க மன்னாரிடமிருந்து வாங்கிய திருமாங்கல்யத்தை ஸ்ரீஆண்டாள் இடம் அணிவித்தார். வெகு சிறப்பாக நடைபெற்ற திருக்கல்யாண உற்சவத்தின் நிறைவில் பக்தர்களுக்கு திருமாங்கல்ய கயிறு பிரசாதமாக வழங்கப்பட்டது. முன்னதாக இன்று காலை ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்க மன்னார் இருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!