ஹெச். ராஜாவுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது

ஹெச். ராஜாவுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது
X
பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா
பெண்களைப் பற்றி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ஹெச். ராஜாவுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் இந்து முன்னணி சார்பில் கடந்த செப்டம்பர் 20ம் தேதி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா பங்கேற்றார்.

அப்போது, அவர் பேசும்போது, இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், அவர்களது வீட்டிலுள்ள பெண்களைப் பற்றி அவதூறாக பேசியதாக விருதுநகர் பஜார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இது தொடர்பான ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜாவிற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி பரம்வீர் உத்தரவிட்டார்.

Tags

Next Story
ai marketing future