மாதவரால் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது

மாதவரால் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
X
ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவரால் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி கட்சியின் சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக வத்திராயிருப்பை சேர்ந்த அந்த கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் மாதவராவ் போட்டியிட்டார். வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு இரண்டு நாட்கள் மட்டுமே பிரச்சாரத்தில் ஈடுபட்ட நிலையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு கொரோனா அறிகுறி காரணமாக மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதனால் மாதவராவிற்கு பதிலாக அவரது மகள் திவ்யாராவ் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் மாதவராவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த சூழ்நிலையில் நுரையீரல் தொற்று பாதிப்பு தீவிரமடைந்து நேற்று (11.4.21) காலை 07.55 மணி அளவில் காலமானார்.

இதனை தொடர்ந்து அவரது உடல் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காதிபோர்டு காலனியில் உள்ள அவரது சொந்த வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா, அ ம முக வேட்பாளர் சங்கீத பிரியா மற்றும் கூட்டணிக் கட்சியினர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் உடலுக்கு நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அருகில் உள்ள மயானத்தில் குடும்ப வழக்கப்படி இறுதிச்சடங்கு செய்யப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்