ஸ்ரீவில்லிபுத்துர் ஆண்டாள் கோவில் யானை புத்துணர்ச்சிக்காக தினமும் நடைபயிற்சி

ஸ்ரீவில்லிபுத்துர் ஆண்டாள் கோவில் யானை புத்துணர்ச்சிக்காக தினமும் நடைபயிற்சி
X

ஆண்டாள் கோவில் யானை நடைபயிற்சிக்கு சென்றதை படத்தில் காணலாம்.

ஆண்டாள் கோவில் யானை புத்துணர்ச்சிக்காக தினமும் அதிகாலை வேளையில் நான்கு ரத வீதி மற்றும் முக்கிய வீதிகளில் நடை பயிற்சி

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானை ஜெயமால் யதா புத்துணர்வு முகாமில் இருந்து வந்த பிறகு புதிய பாகன்கள் நியமிக்கப்பட்டு யானை நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது.

யானைக்கு எவ்வித பிரச்சினையும் ஏற்பட்டு விட கூடாது என்பதை கருத்தில் கொண்டு யானையை கண்காணிப்பு கேமரா மூலம் ஆண்டாள் கோவில் நிர்வாகத்தினர் கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஆண்டாள் கோவில் யானைக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் தினமும் அதிகாலை வேளையில் நான்கு ரத வீதி மற்றும் முக்கிய வீதிகளில் நடை பயிற்சிக்கு அழைத்து செல்ல நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!