ஸ்டாலின் தூண்டுதலால் ஆ.ராசா பேசியுள்ளார் - ராஜேந்திரபாலாஜி

ஸ்டாலின் தூண்டுதலால் ஆ.ராசா பேசியுள்ளார் - ராஜேந்திரபாலாஜி
X

திமுக தலைவர் ஸ்டாலின் ஆ. ராசாவை தூண்டி விட்டு பேச வைத்துள்ளார் என விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, முதலமைச்சரின் தாயாரை இழிவாக பேசுகின்றனர். நான் எவ்வளவு வேகத்தில் பேசினாலும் பெண்களை இழிவாக பேசமாட்டேன். பிறரை துன்புறுத்தி அதில் இன்பம் பெற கூடிய கட்சி திமுக. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கண் கலங்குவதை பார்த்து நானும் கண் கலங்கினேன்.

திமுக தலைவர் ஸ்டாலின் ஆ. ராசாவை தூண்டி விட்டு பேச வைத்துள்ளார். சாத்தூர் வேட்பாளர் ராஜவர்மன் குறுகிய காலத்தில் கொள்ளை அடித்து அரண்மணை மாதிரி வீடு வைத்துள்ளார். ஆனால் நான் அப்படி இல்லை. ஏமாற்றுக்காரர்களிடம் இருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும், தொகுதியை காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் நமக்கு உள்ளது என்று கூறினார்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்