ஸ்ரீவில்லிபுத்தூர்: உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற வியாபாரியிடம் பணம் பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்தூர்: உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற  வியாபாரியிடம் பணம் பறிமுதல்
X

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற நெல் வியாபாரி மகனிடம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பணம் பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆவணமின்றி நெல்வியாபாரி மகன் கொண்டு சென்ற பணத்தை பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற நெல் வியாபாரி மகனிடம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பணம் பறிமுதல் செய்தனர்.

உள்ளாட்சித் தேர்தல் வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் மாநிலம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் .இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வ.புதுப்பட்டி பேரூராட்சி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கான்சாபுரம் பகுதியைச் சேர்ந்த கோகுல் (21) என்பவரின் இருசக்கர வாகனத்தை சோதனையிட்ட போது அதில் உரிய ஆவணம் இல்லாத 76 ஆயிரத்து 300 ரூபாய் பணம் இருந்தது தெரியவந்தது. இதனை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர் . தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் கோகுல் தந்தை நெல் வியாபாரி எனவும் கூறப்படுகிறது .உரிய ஆவணம் இல்லாததால் பணத்தை அதிகாரிகள் கொன்று சென்றனர்.

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!