ஆவின் பால் வாகனத்தை சிறைபிடித்த பால் உற்பத்தியாளர்கள்

ஆவின் பால் வாகனத்தை  சிறைபிடித்த பால் உற்பத்தியாளர்கள்
X
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆவின் பால் வாகனத்தை சிறை பிடித்து, பாலை கீழே கொட்டி பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சுந்தரபாண்டியம் கிராமத்தில் மூன்று பால் உற்பத்தியாளர்கள் சங்கம் உள்ளது. இந்த சங்கங்களின் மூலம் நாள்தோறும் சுமார் 800 லிட்டர் பால் உற்பத்தியாகிறது. இவ்வாறு உற்பத்தி செய்யவும் பாலை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆவின் நிலையத்திற்கு இவர்கள் கொடுத்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக இங்கு உற்பத்தி செய்யப்படும் பாலை ஆவின் அதிகாரிகள் கொள்முதல் செய்ய மறுப்பதாக இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது தொடர்பாக கடந்த 20 நாட்களாக பல்வேறு முயற்சிகள் எடுத்தும் எதுவும் பலனளிக்காத நிலையில் இன்று தங்கள் பகுதிக்கு வந்த ஆவின்பால் வாகனத்தை சிறைபிடித்த உற்பத்தியாளர்கள், பாலை கீழே கொட்டி போராட்டம் நடத்தினர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டக்காரர்களின் பாலை ஆவின் நிர்வாகம் பெற்றுக்கொண்டது. இதை தொடர்ந்து ஆவின்பால் வாகனம் விடுவிக்கப்பட்டு போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

Tags

Next Story
crop opportunities ai agriculture